டில்லி:

ய்வு பெற்று நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.ஏ.எஃப் வீரர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 1.08 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.  அவரது செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது 74 வயதாகும், சிபிஆர் பிரசாத் என்ற முன்னாள் விமானப்படை வீரர், ஓய்வுபெற்ற பிறகு, சுமார் 40 ஆண்டுகளாக சொந்தமாக தொழில் செய்து வந்த நிலையில், அதில் கிடைத்த வருமா னத்தை மத்திய பாதுகாப்பு துறைக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, நன்கொடைக்கான செக்கை அவர் வழங்கினார்.

முன்னாள் ஐஏஎப் வீரர் சிபிஆர் பிரசாத்

இதுகுறித்து கூறிய சிபிஆர் பிரசாத் சுமார் 7 ஆண்டுகள் ஐஏஎப் வீரராக பணியாற்றிய நிலையில்,  ரயில்வேயில் கிடைத்த வேலைக்காக தனது பணியை விட்டுவிட்ட நிலையில், அவருக்கு துரதிருஷ்டவசமாக ரயில்வே வேலையும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது வாழ்வாதாரத் திற்காக ஒரு சிறிய கோழி பண்ணையைத் தொடங்கியதாகவும், அதில் நல்ல முன்னேற்றம் கண்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

தனது மனதில் இந்திய பாதுகாப்பு படையினருக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் ஓடியதாக வும், ஆனால், எனது குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிய பிறகுதான் , அதற்கான முயற்சியை மேற்கொண்டேன் என்று தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து தனது குடும்பத்தினருடன் விவாதித்த தாகவும், தனது மகளுக்கு எனது சொத்தில் 2 சதவீதத்தையும், ஒரு சதவீதத்தையும் என் மனைவி யிடம் கொடுத்துள்ளேன். அவர்களின் சம்மதத்துடனே மீதமுள்ள 97 சதவீத பணத்தை தான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நன்கொடையாக வழங்கினேன் என்று தெரிவித்து உள்ளார்.

தான் சம்பாதித்த ரூ .1.08 கோடியை  பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து வழங்கியதாக தெரிவித்தவர், “தனது முழு சேமிப்பையும் பாதுகாப்பு துறைக்கு திருப்பித் தருவதைக் கண்டு ராஜ்நாத் சிங் மகிழ்ச்சியடைந்தார்,” என்று அவர் கூறுகிறார்.

சுமார் 30 ஆண்டுகளாக தான் உழைத்த கடுமையான உழைப்பின் காரணமாகவே இவ்வளவு பணம் சேமிக்க முடிந்ததாக தெரிவித்துள்ள சிபிஆர் பிரசாத், சமுதாயத்திற்கு உதவும் நோக்கில் விளையாட்டு பல்கலைக்கழகத்தையும் அமைத்துள்ளார்.

முன்னாள் ஐஏஎப் வீரர் சிபிஆர் பிரசாத் வழங்கிய நன்கொடை செக்

இதற்கு காரணம்,  நான் 20 வயதாக இருந்தபோது, ​​நான் விமானப்படையில் பணிபுரிந்தபோது, ​​என் அதிகாரிகள் கோயம்புத்தூரைச் சேர்ந்த  ஜி.டி. நாயுடுவை தலைமை விருந்தினராக அழைத்து வந்தனர். அப்போது,  அவர் சொன்னார், இந்தியா ஒரு சிறந்த நாடு என்று, ஏனெனில் எங்கள் முனிவர்கள் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத் தார்கள் ,அதன்படிதான், எனது  குடும்ப பொறுப்பு முடிந்ததும், இந்த உதவியை செய்தேன் என்று தெரிவித்து உள்ளார்.

“வரும்போது உங்களுக்கு எதுவும் கிடைக்காது, அதுபோல போகும்போதும் நீங்கள் எதையும் கொண்டு போகமுடியாத, அதனால்,  குறைந்தபட்சத்தை உங்கள் குடும்பத்திற்கும் மீத முள்ளவர்களுக்கும் சமுதாயத்திற்கும், வாழ்நாள் முழுவதும் சமூகத்துக்கும் கொடுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

தனது போராட்ட நாட்களை நினைவு கூர்ந்த ஜிபிஆர் பிரசாத், “நான் என் பாக்கெட்டில் ரூ .5 உடன் வீட்டை விட்டு வெளியேறி 500 ஏக்கர் நிலத்தை என் கடின உழைப்பால் சம்பாதித்தேன். நான் என் மனைவிக்கு 5 ஏக்கர் மற்றும் என் மகளுக்கு 10 ஏக்கர் கொடுத்து எல்லாவற்றையும் ஓய்வெடுத் தேன் , மீதமுள்ள வருமானத்தை நான் சமூகத்திற்காகப் பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும், தனக்கு  ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு  இருந்தது. ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை, அதன் காரணமாகவே  “நான் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் வளாகம் போன்ற ஒரு விளையாட்டு பல்கலைக்கழகத்தை நிறுவினேன். மற்றொரு 50 ஏக்கர் நிலத்தில், நான் மற்றொரு விளையாட்டு பல்கலைக்கழகத்தை உருவாக்குகிறேன். எனது விளையாட்டு லட்சியம் இரண்டு விளையாட்டு பல்கலைக்கழகங்களை கட்ட வேண்டும்  என்பது என்று தெரிவித்தவர்,  ஒன்று சிறுவர்களுக்கும் ஒரு சிறுமிக்கும் என்று தெரிவித்தவர், தனது கனவு நிறைவேறாத நிலையில்,  கடந்த 20 ஆண்டுகளாக நான் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன், அவர்கள் மூலம் எனது கனவை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.