சென்னை :
மிழகத்தில் திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து கோட்டை வளாகம் கொதிப்புடனே இருந்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரபப்பு மேலோங்கி உள்ளது.
dmk - Copy
கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட அமளி காரணமாக எதிர்க்கட்சியாக திமுக ஒரு வாரம் காலம் அவைத்தலைவரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் தர்ணா செய்தது,  போட்டி சட்டசபை கூட்டம் போன்ற  ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுபோல இன்றும் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என சந்தேகத்தின் பேரில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதங்களுக்கு காவல்துறைக்கு பொறுப்பு வகித்துவரும்  முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேச இருக்கிறார். இன்று காலை கேள்வி நேரம் இல்லை என்பதால், பேரவை தொடங்கியவுடன் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்  ஆரம்பமாகும் என தெரிகிறது.
இதையொட்டி நூற்றுக்கணக்கான  போலீசார்  தலைமைச் செயலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.  தலைமைச் செயலகத்துக்குள் உள்ளே நுழையும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
tn - Copy
சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோட்டை வளாகத்திற்குள் நுழையாமல் இருக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோட்டை நுழைவு வாயிலில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்துக்கு வருபவர்களை, கோட்டை வாயிலில் இருக்கும் போலீசார் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் போலீசாருக்கு தரப்பட்டுள்ளது. அவர்கள் கோட்டைக்கு வரும் பட்சத்தில் உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக  கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு பத்திரிகையிலிருந்தும், சட்டசபை நிகழ்வுகளை  சேகரிக்க 2 செய்தியாளர்  மற்றும் ஒரு ஒளிபரப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று செய்தி துறை தெரிவித்துள்ளது.

தலைமை செயலகம் எதிரே போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது
தலைமை செயலகம் எதிரே போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது

அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்றும், நான்காம் கேட் அருகே  உறுப்பினர்களிடம் பேட்டி எடுக்க அனுமதி கிடையாது என்றும், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் கட்சிகள் நாமக்கல் மாளிகை அருகே மட்டுமே பேட்டி கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைமை செயலகத்தில் செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்களுக்கு  செய்தித்துறை சார்பில் கடுமையான கட்டுப்பாடு விதிப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. அதையடுத்து பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இன்று திமுகவினர் போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.
தீவுத்திடல் அருகே போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது
தீவுத்திடல் அருகே போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகையில், திங்கள்கிழமை நடைபெறவுள்ள காவல்துறை மானியக் கோரிக்கையில் ஜெயலலிதா பேசுவார் என்பதால், அப்போது தி.மு.க.வின் உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக் கூடாது என்பதற்காகவே இத்தகைய வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார். பிணையில் வெளிவரக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் தான் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ள போதும், இது அரசியல் ரீதியான பழிவாங்கும் போக்கு என மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம்  திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை எதிர்த்து மாவட்டம்தோறும் திமுக கூட்டங்கள் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.