அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளின்டன் தனது டேட்டிங்-கிற்கு உதவ முன்வந்ததாக வேல்ஸ் அமைச்சர் மைல்ஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் கீழ் செயல்பட்டு வரும் வேல்ஸ் அரசின் கல்வித் துறை அமைச்சராக உள்ள ஜெர்மி மைல்ஸ், வேல்ஸ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாலுறவு விருப்பத்திற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வரும் மைல்ஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வான்சீ பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஹிலாரி கிளின்டன் LGBT குறித்து பேசியிருந்தார்.

இதுகுறித்து அவருக்கு நன்றி தெரிவித்த மைல்ஸ் தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அறிந்த ஹிலாரி, “உங்களுக்கு ஜோடி யாரும் இருக்கிறார்களா ?” என்று கேட்டுள்ளார், அப்போது தான் ‘சிங்கிள்’ என்று கூறியுள்ளார் மைல்ஸ்.

அதற்கு “எனக்கு தெரிந்த நண்பர்களிடம் உங்களை அறிமுகப்படுத்தட்டுமா?” என்று உலகின் முக்கிய தலைவர் ஒருவரின் பெயரையும் கூறியுள்ளார்.

“அப்போது அது மிகப்பெரிய விஷயமாக தெரிந்ததால் நான் அதற்கு சரி என்று சொல்லவில்லை” என்று மைல்ஸ் கூறியது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.