சென்னை:
மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சிங்கமென செயல்பட்டவர் வாழப்பாடியார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நீண்டகாலம் செயலாற்றிய தலைவர் வாழப்பாடி கூ. இராமமூர்த்தி அவர்கள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கிருஷ்ணசாமி பேசுகையில், வாழப்பாடி கூ. இராமமூர்த்தி அவர்களது 80-ஆவது பிறந்த நாளில் ஒரு பத்திரிகை தொகுப்பு வெளி வருவது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தலைவர் வாழப்பாடி ராமமூ’ர்த்தி அவர்கள், மாணவர் காலத்திலிருந்தே அரசியலில் நாட்டம் கொண்டவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்து, விட்டு வெளி வந்து, தலைவர் எம்.பி. சுப்பிரமணியம் அவர்களையும், ஈ.வி.கே. சம்பத் அவர்களையும் தலைவராக ஏற்றுக் கொண்டு, அரசியலில் நுழைந்தார்.
அவர் அரசியலுக்கு வந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சீரிய தலைமையை ஏற்றுக் கொண்டு அவரது கொள்கையைப் பின்பற்றினார். வாழப்பாடி  ராமமூர்த்தி ஒரு தொழிற்சங்கவாதி என்று சொல்லலாம்.
அந்த காலத்தில் ஐஎன்டிசி பெரிய தலைவராக இருந்தார். பல நாடுகளுக்குச் சென்று இருக்கிறார். தொழிலாளர்களுக்காக வாதாடி இருக்கிறார். இப்படி பல செயல்களை நல்ல முறையில் செய்து தொழிற்சங்கத்தில் நல்ல பெயரைப் பெற்றவர் என்பது  கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும். வாழப்பாடி ராமமூர்த்தி “சேலத்தின் சிங்கம்” மற்றும் “சேலத்தின் இரும்பு மனிதர்” என்றும் அழைக்கும் அளவுக்கு தைரியமான பெரிய தலைவர். அவர் யாரும் அஞ்சாதவர், மனதில் பட்டதை அப்படியே பேசுவார். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளார்.
1991-ல் அதிமுக-காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் ராஜீவ் காந்தி அலையால் வெற்றி பெற வில்லை என்று தெரிவித்தார்.
இதை ஜீரணிக்க முடியாத வாழப்பாடி ராமமூர்த்தி, ஜெயலலிதாவோடு சண்டை போட்டு அந்த கூட்டணியில் வெளியே வந்தார்.
தஞ்சாவூரில் நடந்த உலக தமிழ் மாநாடு நடந்த போது, அந்த நிகழ்ச்சிக்கு பிரதமராக இருந்த நரசிமராவ் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வருகையை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டுவேன் என்று வாழப்பாடி ராமமூர்த்தி தைரியமாகத் தெரிவித்தவர்.
ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி,ஒரு அறிக்கை வெளியிட்ட உள்ளதை அறிந்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
அவர் இருந்த காலம் தமிழ்நாட்டுக்கே பொற்காலமாக இருந்தது. 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 60 எம்.எல்.ஏ.-கள் இருந்தனர். அவர் இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெற்று இருக்கும் என்று கருதுகிறேன்.
தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரை, உலக சம்மேளனத்தின் துணைத் தலைவர்  இருந்த பெருமை பெற்றவர். 1967-க்கு பிறகு அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றது, அவரது காலத்தில் தான் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.