கொழும்பு,
இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்தபோது, அவரது மகன் நாமல் பக்சே, வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார்கள் குவிந்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே. அவர் அதிபராக இருந்தபோது ஏராளமான ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன.
இலங்கை அதிபராக மைத்ரி சிறிசேனா ஆட்சி அமைந்தவுடன் ராஜபக்சே மற்றும் அவரது குடுப்பத்தினர் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜபக்சேவின் அவரது தம்பிகள், அவரர்களது மனைவி மற்றும் மகன்கள் மற்றும் ராஜபக்சே மகன்கள் மீதும் புகார்கள் கூறப்பட்டு கைது செய்யப்பட்டும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜ பக்சே மூத்த மகன் நாமல் மீது அதிரடியாக ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார்.
உல்லாச பிரியரான நாமல், இளம்பெண்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பல பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே இவர் மீது 3 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர்.
கண்டியில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு இளம் பெண் களை அழைத்து சென்று அவர்களுடன் நாமல் ‘செக்ஸ்’ உல்லாசம் அனுபவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறது.
அதை தொடர்ந்து அந்த ஓட்டல்களுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாதம் ஒன்றுக்கு 4 நாட்கள் ஓட்டல்களுக்கு சென்று பல பெண்களுடன் நாமல் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் கண்டி நீலப்படை அணியின் அதிகாரியும் சம்பந்தப் பட்டிருப்பதும் கண்டறியப் பட்டுள்ளது.
நாமல் ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை 109 பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஊழல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நாமல் ராஜபக்ஷே கூறும் போது எனது குடும்பத்துக்கு எதிரான குற்றசாட்டுகள் அரசில் தூண்டுதலால் கூறப்படுகிறது.என கூறி உள்ளார்.