டெல்லி: பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. டெல்லியில் முகாமிட்டுள்ள  அமரீந்தர் சிங்,  அங்கு இன்று உள்துறை அமித்ஷாவை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை  அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் மறுத்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாநில காங்கிரஸ் தலைவராக அம்ரீந்தரின் எதிரியான நவ்ரோத்சிங் சித்துவை கட்சி தலைமை அறிவித்தது. இதனால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அம்ரீந்தர் சிங் கட்சி தலைமைமீது கடுமையாக விமர்சித்தார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக காட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், ராஜிநாமா செய்தபின்  திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஒருவேளை பாஜகவில் அம்ரீந்தர்சிங் இணைந்தால், அவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்கவும் பாஜக தலைமை திட்டமிட்டு உள்ளதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இன்று மாநில கட்சித்தலைவர் பதவியில் இருந்து நவ்ரோத்சிங் சித்து, ராஜினாமா செய்து, கட்சி தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அடுத்தடுத்து பஞ்சாபில் நிகழும் அரசியல் நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை கேப்டன் அமரிந்தர் சிங் பா.ஜ.க.வில் சேர மறுத்தால், அவரைக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து திடீர் ராஜினாமா….!