சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல்தலைவரும், எம்.பி.யுமான  மறைந்த எச் வசந்தகுமார் முதலாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள  மணி மண்டபம் இன்று திக்கப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவரும் மக்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான  எச் வசந்தகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு. அவரது சொந்த ஊரான  கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யும், மறைந்த வசந்தகுமாரின் மகனுமான விஜய்வசந்த் செய்துள்ளார்.