வெனிசுலா அழகிக்கு எதிராக ட்ரம்ப் இனவெறி பேச்சு: தோலுரிக்கும் ஹிலாரி

Must read

1996-ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற வெனிசுலாவின் அழகியான அலிசியா மசாடோவை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் அவதூறாக விமர்ச்சித்து அவரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

trumb

டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் இருவரும் சமீபத்தில் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் விவாதம் செய்தனர். அதில் ஹிலாரி டொனால்டு டிரம்ப் முன்னாள் உலக அழகியை Miss Piggy எனவும், தென்னமெரிக்கர்க ஏழைகள் பலர் அமெரிக்காவில் வீட்டு வேலை செய்பவர்களாக இருப்பதால் அவரை Miss Housekeeping எனவும், An Eating Machine எனவும் பலர் முன்னிலையில் அவதூறாக பேசியதை சுட்டிக்காட்டி டொனால்ட் டிரம்ப் பெண்களுக்கும், சிறுபான்மையினராக இருக்கும் வெளிநாட்டினருக்கும் எதிரானவர் என்ற கருத்தை வெளியிட்டார்.
alicia
இந்த விவாதத்துக்கு பின்னர் அலிசியா மசாடோ பேசிய வீடியோ ஒன்றை ஹிலாரி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட அது காட்டுத்தீ போல பரவிக்கொண்டிருக்கிறது. அலிசியா மசாடோ இப்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுவிட்டார். இப்போது அவர் தென்னமெரிக்க மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். அவர் தனது முதல் ஓட்டை ஹிலாரிக்கு போடப் போவதாக தெரிவித்துள்ளார். இது பழிவாங்குவதற்காக அல்ல, டொனால்டு டிரம்ப்பை எனக்கு தனிப்பட்ட விதத்தில் நன்கு தெரியும். அமெரிக்கா போன்ற சுதந்திரமான, அருமையான நாட்டுக்கு டொனால்டு டிரம்ப் போன்றவர்கள் அதிபராவது ஏற்றதல்ல என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

More articles

Latest article