சென்னை: தமிழகத்திற்கு தடங்கலின்றி தடுப்பூசிகளை வழங்குங்கள் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 3ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு டிவிட் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அதில், தமிழகத்தில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி 3ந்தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், தடுப்பூசி தடங்கலின்றி, தமிழகத்திற்கு கிடைக்க செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.