டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 3லட்சம் வரை தினசரி பாதிப்பு உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து, மே மாத இறுதியில் தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழே வந்துள்ளது. இதையடுத்து வேகமாக குறைத்தொடங்கியுள்ள தொற்று இன்று 5வது நாளாக ஒன்றரை லட்சத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு  2,81,75,044 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில்,  2,795 பேர் உயிரிழந்ததாகவும், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,895 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றின் பாதிப்பில் இருந்து  2,55,287 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், இதுரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,59,47,629   ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,95,520 ஆக உள்ளது. இது வெகுவாக  குறைந்துள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1.65 லட்சம், நேற்று 1.52 லட்சமாக இருந்த நிலையில் இன்று 1.27 லட்சமாக குறைந்துள்ளது.

அதே போல, கொரோனா மரணங்களும் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்ததோடு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 20 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 21,60,46,638 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும்  19,25,374 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை  34,67,92,257  மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

இந்தியா விரைவில் கொரோனாவின் 2வது அலையின்  கோரப்பிடியில் இருந்து மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.