தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்யநாதன், 61, நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 1957 முதல் 1967 வரை காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர் கக்கன்.

இவரது மூன்றாவது மகன் சத்தியநாதன் அரசு மருத்துவராக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

சென்னை லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த இவர் நேற்று மாலை தனது வீட்டில் வழுக்கி விழுந்து மரணமடைந்தார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில் :

“தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கக்கன் அவர்களது மகன் மருத்துவர் சத்தியநாதன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.