விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவியதால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. அவரது வீட்டு முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த பலரை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அடுத்தடுத்து கைது செய்து வருகிறது. ஒவ்வொருவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் போட்டுள்ளது. அடுத்து சி.வி.சண்முகம் கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவின.

திமுக அரசுக்கு எதிராக விழுப்புரத்தில்  நடைபெற்ற கண்டன போராட்டத்தின்போது, தமிழக அரசை சி.வி.சண்முகம் கடுமையாக சாடினார். அப்போது, திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள், தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.  சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் இருக்கிறது. கொலைகள், பாலியல் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இவற்றை தடுக்க வேண்டிய தமிழக டிஜிபி டி.ஜி.பி சைலேந்திரபாபு சைக்கிள் ஓட்டுகிறார். சைக்கிள் ஓட்டுவதுதான் அவருக்கு வேலையா?  என்று கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாட்டில். அமைச்சர்கள் செயல்பட யாருக்கும் அனுமதி இல்லை. இது தொடர்பாக அவர்மீது புகார்கள் பதியப்பட்டது. இதுமட்டுமின்றி,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டிவிழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெடற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்  உரையாற்றியபோது, கூட்டத்தில் ஒருவர் சண்முகத்தை பார்த்து  பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொல்லிது சர்ச்சையானது.  இதுகுறித்து அவரை ஒருமையில் பேசிய சண்முகம், காவல்துறை தற்போது ஏவல்துறை யாக உள்ளது என்று விமர்சித்தார். இது தொடர்பாகவும் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசை கடுமையாக தாக்கி பேசி வருவதால், அவரை அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்ய அரசும், காவல்துறையும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இன்று   சி.வி. சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக வந்த  தகவலையடுத்து அவரது வீட்டின் முன்பு 200 -க்கும்  மேற்பட்ட அதிமுகவினர் குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம்  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், மொட்டையன் தெருவில் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால்,  நேற்று இரவு  சி.வி. சண்முகத்தை போலீசார் கைது செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர்  திரண்டு வந்து  அவரது வீட்டின் முன்பு குவிந்தனர் . இதனால் சிவி சண்முகம் வீடு உள்ள பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சி.வி.சண்முகம் சென்னையில் இருந்து விழுப்புரம் திரும்பினார்.  அங்கிருந்த கட்சியினரிடம் என்னை  கைது செய்தாலும் பிரச்சனை இல்லை அனைவரும் அவரவர் வீட்டுக்கு செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அங்கிருந்த கட்சி தொண்டர்கள் கலைந்து சென்றனர். இதனால் விழுப்புரம்  பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டடுள்ளது.

ஜெயக்குமாரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விரைவில் கைது?