சோலார் பேனல் ஊழல்: கேரள காங். முன்னாள் முதல்வர் விடுதலை!

திருவனந்தபுரம்,

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தய சோலார் பேனல் ஊழல் வழக்கிலிருந்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உம்மன்சாண்டிக்கு  எதிராக போதுமான ஆதாரங்கள்  இல்லை என்று கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம்  விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தபோது,  வீடுகளுக்கு சூரிய மின்தகடுகள் பொருத்துவதாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

கேரளாவையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில் அப்போதைய முதல்வர்  உம்மன்சாண்டி மற்றும் மின்சார துறை அமைச்சர் ஆரியாடன் முகமது ஆகியோருக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் கொடுக்கப் பட்டதாக குருவில்லா என்பவர் கூறினார்.

இது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், குருவில்லாவுக்கு 12 சதவீத வட்டியுடன் ரூ.1.60 கோடியை 6 பேரும் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உம்மண்சாண்டி தரப்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்உபோது, நீதிபதி,  உம்மண் சாண்டி மீது சுமத்தப்பட்ட புகாரை நிரூபிக்கும் வகையில்  போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும்,  மனுதாரர் குருவில்லா ரூ.1.61 கோடி பணத்தை உம்மண் சாண்டியிடம் கொடுத்ததற்கான எந்தவிதமான  பரிமாற்ற ஆவணங்களும் இல்லை. ஆகவே,  இதை கருத்தில் கொண்டு உம்மண்சாண்டியை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், மற்ற 5 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்தார்.
English Summary
Former Kerala CM Oommen Chandy acquitted in solar scam case