சென்னை: தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போத அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பாராட்டு தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘விருதுகள் வழங்கும் விழா – 2022’ சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில்,  கர்நாடக  முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விருது பெறுவதற்காக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா இன்று சென்னை வருகை தந்ததுள்ளார். அதைத்தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வபெருந்தகையுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்று  முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, சித்தராமையாவுக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு  உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித் சித்தராமையா,  முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்ததாக சந்தித்தேன். அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுவது பெருமையாக இருக்கிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.