திமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்

Must read

சென்னை:

 முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார்.

லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.

இவர்  திமுக கட்சியின் முன்னாள் தலைமை நிலைய செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ஆயிரம் விளக்கு உசேனை  கடந்த மார்ச் மாதம் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் இன்று காலமானார்.

ஆயிரம் விளக்கு உசேன் மறைவு குறித்து திமுக பிரமுகரும், மக்களவை எம்பியுமான தயாநிதி மாறன் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அதில், ‘முன்னாள் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் தலைமை நிலைய செயலாளர் களில் ஒருவரும், கழகத்தினர் அனைவரிடத்திலும் அன்பை செலுத்தக்கூடியவருமாகிய ஆருயிர் அண்ணன் ஆயிரம் விளக்கு எஸ்ஏஎம் உசேன் அவர்களின் மறைவு என்பது கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை கண்ணீர்மல்க தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

More articles

Latest article