
தஞ்சாவூர்:
மறைந்த புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜனின் மனைவியும், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது பரோலில் வந்துள்ள சசிகலாவை திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திடீரென இன்று காலை சந்தித்து பேசினார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் இறந்ததை தொடர்ந்து, இறுதிச்சடங்கு செய்வதற்காக, பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா 15 நாள் பரோலில் வந்தார்.
கணவரின் இறுதிச்சடங்கு முடிந்து நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்த சசிகலாவுக்கு அவரது உறவினர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆறுதல் கூறி வந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை பெங்களூர் சிறைக்கு மீண்டும் திரும்பிய நிலையில், இன்று காலை திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை சசிகலாவை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.
நடராஜனின் மறைவுக்கு ஆறுதல் கூறுவதற்காக சசிகலாவை சந்தித்ததாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]