வேலூர்: மணல் கடத்தல் மூலம் ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்கு அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சம்பாதித்து உள்ளதாக, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி குடியாத்தம் குமரன் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மணல் மற்றும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆட்சியாளர்களே பினாமி பெயரில் கனிம வளங்களை திருடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், திமுகவை சேர்ந்த குடியாத்தம் பகுதி கொள்கை பரபரப்பு துணை செயலாளர் குமரன் என்பவர், திமுகமீதான அதிருப்தியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தி வந்தார். சமீபத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்விக்கு பிரதமர் மோடிதான் என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், குடியாத்தம் குமரன் அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,   அதில், . எனக்கும் துரைமுரு கனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை அவருடைய மகன் கதிர் ஆனந்த்தான் வேலூர் மாவட்டத்திலேயே பிரச்னை. துரைமுருகனின் தம்பி ஒரு பக்கம், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஒரு பக்கம் என்று குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது.

30 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டதாக எவனோ ஒருவன் பொய்யான ஆடியோவை வெளியிட்டான். ஆனால், உண்மையில், மணல் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் 60,000 கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார். இது பற்றிய உண்மைகளை நான் விரைவில் வெளியிடுவேன்.

துரைமுருகனின் பல வீடியோக்கள், தொலைபேசி உரையாடல்கள் பதிவுகள் எனிடம் இருப்பதாக தெரிவித்தார். மேலும் என்னை செருப்பால் அடித்தாலும் எனது கட்சி தி.மு.க தான். என்னுடைய தலைவர் ஸ்டாலின் தான். என்னுடைய வருங்கால தலைவர் உதயநிதி ஸ்டாலின்தான் என குடியாத்தம் குமரன் ஆவேசமாகப் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.