சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி வெளியே காரில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் முழு ஊரடங்கு கடந்த 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மக்கள் வாகனங்களில் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், திருவான்மியூர் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் காய்கறி வாங்க காரில் சென்றாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவர்மீது, ஊரடங்கை மீறியதாக திருவான்மியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.