மதுரை: முன்னாள் காங். எம்.எல்.ஏ. தெய்வநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது  87.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், கட்சியில் பல பொறுப்புகளில் பணியாற்றிய முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகம் (வயது 87). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் காலமானதாக  அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

தெய்வநாயகம்,  ர் கடந்த 3 முறை மதுரை மத்திய தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதாவது, 1984-87, 1991-96 மற்றும் 1996-2000 கால கட்டங்களில் 3 முறை மதுரை மத்திய தொகுதியில் எம்.எல்.ஏ.வாக  தெர்ந்தெடுக்கப்பட்டவர், மேலும், தமிழ்நாடுஎ காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பொறுப்புகளிலும் பணியாற்றி இருந்தார்.

இடையில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மூப்பனாருடன் இணைந்து பணியாற்றினார், பின்னர், அங்கிருந்து விலகி காங்கிரசில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார்.

தெய்வநாயகம் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.