ராமநாதபுரம்:  ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக சுயேச்சையாக போட்யிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து போட்டியிட்ட 5 பன்னீர்செல்வம் மனுக்களும்  ஏற்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்,  ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த 26ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.  அவருக்கு எதிராக பன்னீர் செல்வம் பெயருடையே மேலும் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்படி, அமதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளத. அதுபோல,   ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என்பவரும் மனுதாக்கல் செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அதே பெயருடைய 5 பேர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஓபிஎஸ்-உடன் அவேரை எதிர்த்து களமிறங்கி உள்ள 5 பன்னீர் செல்வம் மனுக்களும் வேட்பு மனு பரிசீலனையில் ஏற்கப்பட்டு உள்ளது.