சென்னை: பிளஸ்2 தேர்வில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு முன்னாள் முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதனையொட்டி தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து  முன்னாள் முதரலவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில்  ‘95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதுதொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர்,  அன்பில் மகேஷ் தொடர்பு கொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்! கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளப் பதிவில், இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.

அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள பதிவில், “12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வெழுதிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது ரிசல்ட் தான், இதுவே வாழ்க்கை கிடையாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர்ந்து இந்நாளை கடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்..

[youtube-feed feed=1]