சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். மறைந்த திமுக தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான கலைஞரின் ன் செயலராக அரை நூற்றாண்டுகள் பணியாற்றிய சன்முகநாதன் உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
1996 ஆம் ஆண்டு கருணாநிதியிடம் நேர்முக உதவியாளராக பணிக்கு சேர்ந்த சண்முகம் தொடர்ந்து 50 ஆண்டுகளாக அவருடன் இருந்துள்ளார். கருணா நிதியை சந்திக்க வரும் முக்கிய தலைவர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் குட்டி பி.ஏ.’என்று தான் சண்முகநாதனை அழைப்பார்கள். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான உறவு அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்று. கருணாநிதியின் கண் அசைவுக்கு என்ன அர்த்தம்? அவர் சந்திக்கலாம் என்றால் என்ன அர்த்தம்? எப்போதும் தூங்குவார்? எப்போது கண் விழிப்பார்? என கருணாநிதியை பற்றி தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவர் இவர் ஒருவரே.
50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான உறவு அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்துக் கொள்ளது. கருணாநிதியின் வலதுப்புறத்தில் உதவியாளராக நின்றுக் கொண்டிருந்தவர் . கோபாலபுர இல்லம், முரசொலி அலுவலகம், அரசியல் மேடைகள் என கருணாநிதி செல்லும் அனைத்து இடங்களிலும் அவருடன் செல்லும் ஒரே நபர் உதவியாளர் சண்முகநாதன் தான்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு, வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வயது முதிர்வு கரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.