சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரரது பிறந்தநாளை இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாட திமுக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதனப்டி,  இன்று காலை அரசு சார்பில் அண்ணா சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்படும் என அரசாணை வெளியாகியுள்ளது.

ஜெ.பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தொண்டர்கள், அமுமுக தொண்டர்கள், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் என தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த ஜெயலலிதா, தமிழக முதல்வராக பதவி வகித்து மக்கள் பணி பணியாற்றியதால் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்  என்றும்,  இந்தாண்டும் அவருக்கு மரியாதை செலுத்த அரசாணை வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  ஜெயலலிலதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு இன்று காலை 9.30 மணிக்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.