சென்னை:  அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவினர் இணைந்தனர். இது அதிமுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். அதுபோல, சிவகாசி  தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரனும் முதல்வர் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து மறைமுக பேச்சவார்த்தைகள் நடைபெற்ற வருகின்க. தேர்தலை  எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராகி வருகிறது.  இந்த தடவை 4 முனை போட்டி நிலவுகிறது. இதனால், அதிமுக உள்பட மாற்று கட்சிகளில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை இழுக்க தவெக முயற்சித்து வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என ஆசை காட்டி, கூட்டணி சேர்க்க முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து திமுக-வில் இணைந்தார். இவர்  பழனி தொகுதி முன்னாள்  அதிமுக எம்எல்ஏ.

அதுபோல,  சிவகாசி தொகுதி  அதிமுக  முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரனும்  அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து திமுக-வில் இணைந்தார்.

சுப்புரத்தினம், பாலகங்காதரன் இருவரும் 1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள். திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞரான சுப்புரத்தினம் ஓபிஎஸ்-ன் மிக தீவிரமான ஆதரவாளர். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் விளக்கப்பட்ட போது அவர் கூடவே பயணித்தவர். ஓபிஎஸ்-ன் சட்ட போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் சுப்புரத்தினம் ஆவார்.

சிவகாசி பாலகங்காதரன், முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளர் உமாநாத்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]