பழனி: பழனி கோவிலில் ஐஏஎஸ் அதிகாரி என கூறி கோவில் விடுதியில் அறை கேட்டு அலப்பறை செய்த போலி ஐஏஎஸ் கைது செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் ஏராளமானோர் ஐஏஎஸ், ஐபிஎல் என போலியாக ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற மோசடி பேர்வழிகளும் அவ்வப்போது காவல்துறையிடம் சிக்கி சிறைவாசம் அனுபவிக்கின்றனர். இருந்தாலும் இந்த மோசடிகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
இந்த நிலையில், பழனி கோவிலுக்கு வந்த குமார் என்பவர், தான் ஐஏஎஸ் அதிகாரி என்றும், பழனி கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தானம் தங்கும் விடுதியில் தங்க சொகுசு அறை வேண்டும் என்று கோரியுள்ளார்.
அவரது நடத்தையில் சந்தேகம் அடை பழகி அடிவாரம் தேவஸ்தானம் தங்கு விடுதியின் ஊழியர்கள் அடிவாரம் காவல்துறையினர் தெரிவித்தனர். உடடினயாக அங்கு விரைந்து காவல்துறையினர் குமாரை மடக்கி விசாரணை செய்ததில், அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என தெரியவந்தது. குமார் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் உபயோகப்படுத்திய சைரன் பொரித்த கார் மற்றும் போலி ஐஏஎஸ் அடையாள அட்டையையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.