சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு,  ஆக்கிரமிப்பு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்றகுழு தலைவர் செல்வப் பெருந்தகை, வனத்துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட வேண்டும்  என்று  கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசய வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன்  வனத்துறைக்கு சொந்தமான அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் விரைவில் மீட்கப்படும் என்று கூறியவர், பெரும்பாலான ஆக்கிரப்பு நிலங்கள் விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக,  மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும்,  தேனி மாவட்டம் மேகமலையில் உள்ள வன உயிரின கோட்டத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஆயிரம் ஹெக்டர் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும், தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கிய செயல்திட்ட அறிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.