டெல்லி: இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களது வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி  முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்கும் திட்டம்  கடந்த 1995 முதல் காங்கிரஸ் ஆட்சியின்போது முடிவு செய்யப்பட்டது.  முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இதுதொடர்பான மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதாவை அப்போது, பாரதிய ஜனதா, சமாஜ்வாதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் நிலுவையில் வைக்கப்பட்டது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், புதிதாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி இந்த மசோதாவை நிதி ஆயோக்கிற்கு அனுப்பி கருத்து கேட்டிருந்தார். இதற்கு ஆதரவு அளித்த நிதி ஆயோக், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டத்தில் திருத்தம் செய்து அவற்றை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது. இதை அமல்படுத்தும் முயற்சியில் பாஜக அரசும் ஈடுபட்டது.

இந்த நிலையில்,  வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) ஒப்புதல் தேவை என்று அதன் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர்,.   யுஜிசியின் அனுமதியின்றி எந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகமும் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்க அனுமதிக்கப்படாது என்று கூறியவர்,  யுஜிசியின் அனுமதியின்றி எந்த வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனமும் வளாகங்களை அமைக்க முடியாது என்றவ, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு 10 ஆண்டுகள் ஆரம்ப அனுமதி வழங்கப்படும்.  இருப்பினும், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்படும் ஒப்புதல், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒன்பதாம் ஆண்டில் புதுப்பிக்கப்படும். அவர்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இயற்பியல் முறையில் முழுநேர திட்டங்களை மட்டுமே வழங்க முடியும். பல்கலைக்கழகங்கள் தங்கள் சொந்த சேர்க்கை செயல்முறையை கொண்டு வர சுதந்திரம் பெற்றாலும், பல்கலைக்கழகங்கள் “தங்கள் இந்திய வளாகங்களில் வழங்கப்படும் கல்வியின் தரத்தை அவற்றின் முக்கிய வளாகத்திற்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” இந்தியாவில் வளாகங்களை அமைக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களுடைய சேர்க்கை செயல்முறையைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள சுதந்திரம் அளிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.