சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் படகுகள் சேவையை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த படகு சேவை  கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ள  பிரபலமான  அலையாத்தி காடுகளைக்கொண்ட  பிச்சாவரம் படகு சவாரி இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது .

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம். இங்குள்ள  அலையாத்தி காடுகள் வழியாக இயக்கப்படும்   படகு சேவை பெரும் பிரபலமானது.  இங்குள்ள அலையர்த்தி காடுகள்,  இரண்டாவது பெரிய அலையாத்தி காடுகள் என கூறப்படுகிறது. இந்த அலையாத்தி காடுகள் வழியாக  (Mangrove Forest) அரசின் சுற்றுலாக்கழகம் படகு சவாரி சேவையை வழங்கி வருகிறது. இது சுற்றுலா பயணிகளுக்கு புதிய  அனுபவத்தை வழங்குகிறது. குறுகிய கால்வாய்கள் வழியாகப் பயணிக்கும்போது மரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து அழகான சுரங்கங்கள் போலக் காட்சியளிக்கும், இது ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும். படகு சவாரி பொதுவாக சுமார் 40 நிமிடங்கள் நீடிக்கும்.
இங்கு சுற்றுலாப் பயணிகள் துடுப்பு படகுகள் (Row Boats) அல்லது மோட்டார் படகுகளில் (Motor Boats) குறுகிய கால்வாய்கள் வழியாகச் சென்று பறவைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களைக் காணலாம்; படகுகளை முன்பதிவு செய்ய டிக்கெட் கவுண்டரில் அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே  பதிவு செய்து விட்து. செல்வது நல்லது.  இங்கு 4 பேர் கொண்ட  துடுப்பு படகு (Row Boat)  6 பேர் கொண்ட படகு,  மோட்டார் படகு (Motor Boat): என பலவித படகு சேவைகள் உள்ளன.
இந்த படகு சேவை குழாமில் பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு மேம்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாக  சோலார் ( சூரிய ஒளி சக்தி) மூலம் இயங்கும் படகு சேவைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. இதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறையின் சார்பில் கால நிலை மீள் திறன் மிகு கிராமங்கள் தேர்வு செய்யும் பணி அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் சுற்றுச் சூழல் மற்றும் கால நிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் 11 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கிள்ளை பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி, பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு இல்லத்தில் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் படகு  குழாம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக சோலார் ( சூரிய ஒளி சக்தி) மூலம் இயங்கும் படகு சேவை கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 
 இதனை, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி. ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்து, சுற்றுலாத்துறை ஊழியர்களுடன் படகில் சவாரி செய்தார்.
இந்த திட்டத்தின் கீழ் கிள்ளை பேரூராட்சி பகுதியை பசுமையாகவும், வளம் நிறைந்த பகுதியாகவும் மாற்றும் வகையில், மீன்வளத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 24 லட்சம் மதிப்பில் முழுவதும் சோலாரால் இயக்கப்படும் சூரிய ஒளி மின் படகு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பிச்சாவரம் படகு சவாரி இல்லம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். இந்த பகுதிக்கு, கடலூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த பகுதிக்கு சுற்றுலாவுக்காக வந்து செல்வர்.

சோலார் மின் படகில் 14 பேர் பயணம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோலார் படகு சவாரியில் பயணம் செய்து, அலையாத்தி காடுகளின் அழகை சுற்றிப் பார்ப்பது அலாதி இன்பத்தை தரும். தற்போது, இந்த படகு சவாரி இல்லத்தில் சோலார் மின் படகுகள் இயக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படகுகளில் ஒரே நேரத்தில் 14 பேர் பயணம் செய்யலாம். இதன் காரணமாக பிச்சாவரம் படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் என்பது உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடுகள் நிலமாகும். பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் வனமானது இரண்டு முக்கியமான நதிகளின் முகத்துவாரம், வடக்கில் வெள்ளாறும் சரணாலயத்திற்கு தெற்கில் கொள்ளிட கரையோரத்திற்கும் இடையில் அமைந்திருக்கிறது. பிச்சாவரம் வனப்பகுதியில் படகு சவாரிக்கு 400 க்கும் மேற்பட்ட நீர் வழிகள்  இருபபது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]