காந்திநகர்:

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் முடிந்தது.

 

இதனால் பிரதமர் மோடி வித்தியாசமாக நீர் விமானத்தில் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். ஒற்றை என்ஜின் கொண்ட வெளிநாட்டு விமானத்தில் விதிகளை மீறி அவர் பயணம் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் அந்த விமானம் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பதற்காகன ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அந்த விமானம் ஒரு வாடகை விமானம். அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. ஆனால், அந்த விமானம் தற்போது பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது.

தேர்தல் ‘ஸ்டன்ட்’ அடிப்பதற்காக மோடி இதை பாகிஸ்தானில் இருந்து வரவழைத்துள்ளார் என்ற கருத்து எழுந்துள்ளது. சமூக வலை தளங்களில் இதற்கான ஆதாரங்கள் அடங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கிறது என்று மோடி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் அவர் பாகிஸ்தான் நீர்விமானத்தில் பயணம் செய்து பிரச்சாரத்திற்கு வந்தது பெரும் நகைப்புக்கு உரியதாகியுள்ளது.