சென்னை

சென்னையில் தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 4 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.    தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு தான் என்றாலும் கடந்த சில வருடங்களாக சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் பட்டாசு வெடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்தியா முழுவதிலும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் பசுமைப் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை நகரில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.  மேலும் பட்டாசுகளை பொதுப் போக்குவரத்தில் எடுத்துச் செல்லக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.