சென்னை

கிண்டி காந்தி மண்டப பாலம் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு வழிப் பாதையாக இயங்க உள்ளது.

sample picture

நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில்,

”சென்னையில் கோட்டூர்புரம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிண்டி சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள காந்தி மண்டபம் பாலம் ‘பீக் அவரில்’ ஓ.எம்.ஆர். மற்றும் அடையார் செல்லும் வாகனங்களால் மத்திய கைலாஷ் முதல் வட்டாட்சியர் அலுவலகம் சாலை வரை அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே வாகனங்கள் செல்ல முடியாமல் தேக்கமடைவதால் 3 நாட்கள் சோதனை ஓட்டமாக 21-ந்தேதி (நாளை) காலை 9 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து சீராகச் செல்ல கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

* கிண்டி காந்தி மண்டபம் பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

* ஓ.எம்.ஆர் மற்றும் அடையாற்றில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் காந்தி மண்டபம் பாலம் அடைக்கப்பட்டு காந்தி மண்டபம் சர்வீஸ் சாலை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]