புதுச்சேரி:  தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முறைகேடாக மின் இணைப்புகள் பெற்றவர்களை கண்டறிந்து அதை சரி செய்யும் வகையிலும், மின் முறைகேடுகளை தடுக்கவும் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் மத்தியஅரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில்,  மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இறுதியாக பிப்ரவரி 15ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது, புதுச்சேரியில்  மின் அணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.