75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி…

Must read

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின நாளை கொண்டாடும் வகையில், நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தமிழகஅரசு, பெண்களுக்கான இலவச பேருந்துகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து மெட்ரோ ரயிலின் வருமானமும் குறைந்துள்ளது. இதையடுத்து, வருமானத்தை பெருக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில்,  75வது சுந்தந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய காலை நிகழ்ச்சிகளை நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும்,  சனிக்கிழமை விம்கோ நகரிலும்,  ஞாயிறு அன்று கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திலும், திங்கள் அன்று அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமிய கலைகளும் பிரபலமாகும், சுதந்திர தினத்தை கொண்டாடவும் செய்துவிடலாம், அதே போல, வருமானம் குறைவாக வரும் மெட்ரோவுக்கு இதன் மூலம் கூடுதல் விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article