கோவை: கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தொடர்பாக பாஜகவினர் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை தெற்கு தொகுதி விஐபிக்கள் போட்டியிடும் தொகுதியாக விளங்குகிகறது. திமுக கூட்டணியில் காங்கிரஸின் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். பாஜக சார்பில், பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி அப்துல்வகாப், அமமுகவின் அமைப்புச் செயலாளர் சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு வெற்‘றிக்கனியை பறிக்கப்போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் கோவை சலீவன் வீதி பகுதியில் 6 கார்களுடன் பாஜகவினர் கருணாகரன், சேகர் உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்கள்மீது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.