சென்னை:
ஃபிளைதுபாய் விமானம் சென்னை வர தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் பரவலையொட்டி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவிலிருந்து சிறப்பு அனுமதி பெற்று சிறப்பு விமானங்களில் வெளிநாடு செல்லும் பயணிகள் பலர் தங்கள் விமான பயணங்களை ரத்து செய்கின்றனர்.
இந்நிலையில், தற்போது ஃபிளைதுபாய் விமானம் சென்னை வர தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதித்த் நபரை ஏற்றி வந்த ஃபிளைதுபாய் விமானம் வரும் 31ஆம் தேதி வரை சென்னை வர தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel