சென்னை:
சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது பிறந்த நாள் வருகிற ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் , இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை நிறுவப்படும் என்றும் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு நடுவே கருணாநிதி சிலை அமைக்கப்படும் என்றும் இதன் திறப்பு விழா ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel