சென்னை:

கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரிவிட்டுச் சென்றார். ஏற்கனவே பன்னீர்செல்வமும் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபக்க தயாராக இருக்கிறேன் என்று கவர்னரிடம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில்,‘‘ தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து 3 சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்தேன்.

இரு தரப்பையும் ஒரே நேரத்தில் அழைத்து சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக’’ கவர்னர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘யாராவது ஒருவரை ஆட்சி அமைக்க அழைத்துவிட்டு, பின்னர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டால் சிக்கலாகி விடும்’’ என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக கவர்னர் மாளிகை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.