மக்கள் வெள்ளத்தில் மக்களின் முதல்வர்….

Must read

சென்னை,
நேற்று இரவு மரணத்தை தழுவிய முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெள்ளத்தில் ஜெயலலிதா உடல் மிதப்பது போன்று காட்சி அளிக்கிறது.
makkla-kootam1
 
சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.  ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர்,
பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவின் உடல் மீது மூவர்ண தேசிய கொடியும் அவருக்கு பிடித்தமான பச்சை நிற பட்டுப்புடவை போர்த்தி கண்ணுறங்கிறார்.
அவரது மரணம் தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் சென்னை அண்ணாசாலையில் திரண்டு, மறைந்த மக்களின் முதல்வருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More articles

Latest article