கிருஷ்ணகிரி:

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கே.பி.ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.  கே.பி.ஆர் அணையின் தரைப்பாலத்தை தண்ணீர் தொட்டு செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு;k தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்  கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.