டெல்லி:

விற்பனை செய்த பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் முறையில் பிலிப்கார்ட் மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கும், விற்பனையாளர்களுக்கு செலவு குறையும் என்று கருதப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் பலர் இந்நிறுவனத்தை ஒதுக்கும் சூழ்நிலை ஏற்படவுள்ளது.

நாட்டில் மிகப்பெரிய இ.வணிக நிறுவனமாக பிலிப்கார்ட் விற்பனை செய்யப்படும் பிரபல பொருட்களான மொபைல் பொருட்கள், தனிப்பட்ட உடல் பராமரிப்பு கருவிகள், கம்ப்யூட்டர், கேமரா பொருட்கள், அலுவலக பொருட்கள், விளையாட்டு பொருட்கள், ஸ்மார்ட் ஆடை அணிகலன்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. இது தவிர மொபைல் போன், பெரிய கருவிகள், பர்னிச்சர் போன்றவைகளுக்aகு இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

இத்தகைய பொருட்களை திரும்ப பெறப்பட மாட்டாது. விற்பனை இறுதியானது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்ப்டடுள்ளது. இந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் வியாபார நிறுவனங்கள் இதை வரவேற்றுள்ளன. அதேசமயம் ‘‘தள்ளுபடியுடன் தாராள திரும்ப பெறும் கொள்கை காரணமாக தான் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் இந்த அளவுக்கு வளரமுடிந்தது’’ என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிலிப்கார்ட் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘எங்களது நிறுவனம் எளிமையான வாடிக்கையாளர் நலன் காக்கும் வகையில் விற்ற பொருட்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மொத்தம் ஆயிரத்து 800 பொருட்கள் இணைய தளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சுயசேவை பிரிவு மூலம் ஆயிரத்து 150 வகையான பொருட்கள் திரும்ப பெறப்படும்.

மூன்றில் இரண்டு மடங்குள் பொருட்கள் இந்த திட்டத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டு பணம் வழங்கப்படுகிறது. 60 சதவீதம் உடனடியாக வழங்கப்படுகிறது’’ என்றார்.

மேலும், இ.வணிக நிறுவன இணையளதங்களில்,‘‘ விற்பனை செய்யப்பட்ட பொருளில் ஏதேனும் குறைபாடு இருப்பதை டெலிவரி பெற்ற 10 நாளில் கண்டுபிடித்து திருப்பி அனுப்பினால் அதற்கு பதிலாக அதே பொருள் கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும். ஒரு வேளை அந்த பொருள் இருப்பு இல்லை என்றாலோ அல்லது அந்த பொருளை தயாரிப்பதை சம்மந்தப்பட்ட நிறுவனம் நிறுத்தியிருந்தாலோ மட்டுமே பணம் திரும்ப வழங்கப்படும்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆடைகள், காலணிகள், கண்ணாடி, அலங்கார பொருட்கள் 30 நாட்கள் வரை மாற்றிக் கொள்ளலாம். ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ‘‘கேள்வி கேட்காமல் திரும்ப பெறும்’’ கொள்கையை இ.வணிக நிறுவனங்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்தன. இதனால் அந்த நிறுவனங்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் கூடுதல் செலவு ஏற்பட்டது.

இதேபோல் பிலிப்கார்ட்டின் போட்டி நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் மொபைல் பொருட்கள், பெரிய கருவிகள், வீடியோ கேம்ஸ், புத்தகம், சாப்ட்வேர், பர்னிச்சர், விளையாட்டு உபகரணங்கள், ஆடைகள், கைபை உள்ளிட்ட பொருட்களை திரும்ப பெறும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.