Skip to content
  • Sat. Jul 18th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

3 மாதங்களுக்குள் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி

Jan 27, 2025
மதுரை:  தமிழ்நாடு முழுவதும்  அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 3 மாதங் களுக்குள் அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் (3 மாதங்கள்) அகற்ற வேண்டும்  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
மேலும,  வருங்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்க கூடாது. பட்டா இடங்களில் கம்பங்கள் அமைப்பது குறித்து அரசு உரிய விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக,  மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அ.தி.மு.க.,கொடி கம்பம் நட அனுமதி கோரி,  உயர்நீதிமன்றம்  மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுஇடங்களில் கொடிக்கம்பங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், சமுதாய  இயக்கங்கள் நிறுவ தடை விதிக்கப்படுவதாக கூறியதுடன்,   பட்டா நிலத்தில் கொடிக்கம்பங்களை நிறுவலாம். அதற்குரிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும்,  பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,  கொடி கம்பங்களை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்ற தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கொடி கம்பம் நட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Post navigation

1,752 குழந்தைகள் மீட்பு: கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை! பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தகவல்
வேங்கைவயல் வழக்கு: சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை எதிர்த்து 3பேர் மனு தாக்கல்!

Related Post

தமிழ் நாடு

அண்ணா பல்கலைக்கழக PhD மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

உலகம்

இந்தியா உலகம்

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

July 15, 2026 Sundar
உலகம்

“திறந்திடு சீசேம்” என ஹோர்முஸைத் திறந்த டிரம்ப்… கப்பல்கள் வெளியேற 20% கப்பம் வசூல்…

July 14, 2026 Sundar
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer