நெட்டிசன்

Vikkranth Uyir Nanban அவர்களது முகநூல் பதிவு:

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ஐந்து லட்சம் வழங்கப்படும் என்று செய்தியை நணபர்கள் பலர் பகிர்ந்திருந்தனர்..

அதனால் அதில் எனக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துக்குறேன்..

இந்த திட்டத்தின் பெயர் ‘ Dr.Ambedkar Scheme for social integration through inter- caste marriages’ 2013’ல இருந்தே நடைமுறைல இருக்குற திட்டம்தான்.. சாதி மறுப்பு போல.. மத மறுப்புக்கும் உதவி தொகை வழங்கப்படுமா என்ற கேள்விக்குதான் அமைச்சர் இன்னைக்கு பதில் சொல்லிருக்காரு.. அனா அஞ்சு லட்சம்ன்றதுதான் (தொகை விவரம்) கொழப்புது..

சாதிய நோய் ஊறி போன சமூகத்தில் இயல்பாக வரும் காதலை கூட ஏற்காமல்.. காதலித்து திருமணம் செய்தவர்களை வாழ விடாமல் தடுக்கும் செயல்களை வலுவிலக்க செய்யவே இந்த ஊக்கதொகை உதவி.. Dr.Ambedkar Foundation (Ministry of Social Justice & Empowerment) வழங்குகிறது.. மாறாக இது வேலைவாய்ப்பை பெறுக்கவோ.. வறுமை ஒழிப்பு திட்டமோ அல்ல…

1. சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களின் குடும்ப வருமானம் 5 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது இப்போது தளர்த்தபட்டுள்ளது.. (No Income Limit)
2. இந்த ஊக்க தொகையை பெற.. அரசே கோரிக்கையை அனுப்ப வேண்டிய முறையை தளர்த்தி கலெக்டர்.. மேஜிஸ்ட்ரேட் கூட அனுப்பலாம்…
3. இரண்டரை லட்சம் தொகை இரண்டு பாகமாக கொடுக்கப்படும்.. முதலில் முழு அப்ரூவலும் கிடைத்த பிறகு 1.5 லட்சமும்.. மீதம் 1 லட்சம் Fixed Deposit வைக்கப்பட்டு மூன்று வருடம் கழித்து கனவன் மனைவி இருவரும் சேர்ந்து விண்ணபித்து பெறலாம்..

#Eligibility

1. இருவரில் ஒருவர் Scheduled Caste இன்னொருவர் Non- Scheduled caste ஆக இருத்தல் வேண்டும்..
2.Hindu Marriage Act,1955 சட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்று.. பதிவு செய்யபட்டிருக்க வேண்டும்..
3. இருவருக்கும் இது முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்..
4. திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் விண்ணபிக்க வேண்டும்..
5. இதே திருமணத்திற்கு வேறு வடிவில் அரசாங்கம் மூலம் ஊக்கதொகை பெற்றவர்களால் இந்த தொகையை கோர முடியாது..

இந்த ஊக்க தொகை விண்ணப்பத்தை ஒரு எம்எல்ஏ..எம்பி, கலெக்டர்.. மேஜிஸ்ட்ரேட்.. அல்லது உதவி கமிஷ்னர் அங்கிகரிக்க வேண்டும்.. இதுப்போன்று வருடத்திற்கு 500 சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படும்…அந்தந்த மாநில SC மக்களின் விகிதாச்சார கணக்கு படி..