சென்னை: அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  சுமார் 33 கிராம மீனவர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி நள்ளிரவில் கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு கடலில் இருந்த கப்பலில் இருந்து பைப்லைன் மூலம் அமோனியா வாயு இறக்கும் போது பைப்லைனில் கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சுவாச கோளாரால் அவதிபட்டனர். இந்த அதிர்வலைகள் அந்த பகுதி முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் 27 டிச. காலை முதலே 33 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழ்நாடு அரசு, மக்களை சமாதானப்படுத்தும் நோக்கில், ஆலையை தற்காலிகமாக மூடிவிட்டு, உடனே திறந்து விட்டது.  அத்துடன் நிவாரணமும் வழங்குவதாக அறிவித்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட மீனவ கிராமத்தினர்மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தினமும்  ஒவ்வொரு கிராமமாக கோரமண்டல் உர தொழிற்சாலை நுலைவாயில் முன்பாக போராத்தில் ஈடுபட்டு வந்தனர்.  மீனவர்களின் போராட்டம் இன்று 42 நாளாக தொடர்ந்து வருகிற்து.

இந்த நிலையில் இன்று பசுமை தீர்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 33 மீனவ கிராம மக்களும் கடையரைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  அவர்களுக்கு ஆதரவாக  வியாபாரிகள் சங்கதினர் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.