டில்லி,

மிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

மீனவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட முடிவு செய்துள்ளனர். மேலும், இனிமேல் இதுபோல ஒரு நிகழ்வு நடைபெறாத வகையில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும், அதுவரை இறந்தவரின் உடலை வாங்க மாட்டோம் எனவும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசு கவலை தெரிவித்து உள்ளது என்று இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறி உள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு மிகவும் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை தூதரும் மீனவர் பிரச்னை குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை உறுதி அளித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வக்காலத்து வாங்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறையின் அறிக்கை வெளிவந்திருப்பது, மீனவ மக்களிடையே கடும் கோபத்தை கிளறி உள்ளது.