சென்னை,

லங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரி சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்கினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் படகில் இருந்த பிரிட்ஜோ என்ற மீனவ இளைஞர் கழுத்தில் குண்டு பாய்ந்து இறந்தார்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இறந்த பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் என போராடி வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் இறந்த பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மேலும், துப்பாக்கி சூடு குறித்து கடும் கண்டனமும், பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதி உள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் இந்த மீனவர் குடும்பத்துக்கு காங்கிரஸ் சார்பாக ரூ.1 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.