கோவை: கோவையில் முதல்முறையாக ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 1975-ம் ஆண்டு கோவை மாநகரின் மையப்பகுதியில் தொடங்கப்பட்டது  ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை. இந்த மருத்துவமனையானது எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை யால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவையில் செயல்பட்டு வரும் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பல்வேறு மருத்துவ வரலாறுகளைப் படைத்து, கின்ன சாதனையுடன், மக்கள் சேவையில் 46 ஆண்டுகளாக தலைநிமிர்த்து சேவையாற்றி வருகிறது.

பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு  அதிநவீன சிகிச்சை முறைகளால் சிகிச்சை வழங்கி வருவதுடன்,  நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, தனது பணியினை செவ்வனே செய்து வருகிறது.

கொங்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தற்போது, சென்னையின் பிரபல சர்வதேச நரம்பியல் மனநல சிகிச்சை நிபுணரின் மருத்துவமனையான  புத்தி கிளீனிக்குடன் (Buddhi Clinic) இணைந்து, ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தை கடந்த 12ந்தேதி (12.07.2021) அன்று தொடங்கியது.

சிறப்புமிகு மையத்தை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. டி.லட்சுமிநாராயணசுவாமி, புத்தி கிளீனிக் நிறுவனர் டாக்டர் இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில்  எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர் திருமதி. ஸ்வாதி ரோஹித் ,தலைமைச் செயல் அலுவலர்,திரு. சி.வி. ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் & முதன்மையாளர் டாக்டர் பி.சுகுமாரன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சையானது (‘Integrated Brain and mind Therapy’ ), ‘நோயாளிகளுக்கு நீண்டநாள் சுமையான நாள்பட்ட கோளாறுகள் மீது தனிகவனம் செலுத்தி, புத்துணரச்சியை மீட்டெடுத்து மறுவாழ்வு பெறச் செய்து, அவர்களின் உடல்நலனை மேம்படுத்துவதாகும்.

பழங்கால மருத்துவமுறைகளை, நவீன அறிவியலில் புகுத்தி, மூளை மற்றும் மனநல நோயாளிகள் மற்றும் நரம்பு சார்ந்த பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ‘Integrated Brain and mind Therapy’ சிகிக்சையின் முக்கிய நோக்கமாகும். இந்த அணுகுமுறையானது நோயுடன் பயணிக்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் அடையச் செய்து, அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அளிப்பதாகும்.

இம்மையத்தின் சிகிச்சையானது நம் நாட்டின் ஆற்றல் மிக்க முழுமையான ஆயுர்வேத முறையுடன் நவீன மறுவாழ்வு அறிவியலை உள்ளடக்கிய பாரம்பரிய சிகிச்சை முறையைக் கொண்டது.

14 வகையான மருந்தில்லா சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கியது. 360 டிகிரியில் நோயாளிகளின் உடல், மனம் மற்றும் மனநலனை பழங்கால முறையில் மதிப்பீடு செய்து, நவீன மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து பயனடையச் செய்கிறது.’

தனித்துவமிக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை  (https://www.sriramakrishnahospital.com/) மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தில், ‘Cookie-cutter’ அணுகுமுறையின் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். இடைநிலை செய்முறை இயக்கத்தைப் பயன்படுத்தி, மருத்துவ ஆராய்ச்சி முறைகளின் படி, துல்லியமான தனித்துவமிக்க மருத்துவ உத்திகளைக் கையாண்டு அளிக்கப்படும் சிகிச்சையால் நரம்பியல், மூளை மற்றும் மனநல நோயாளிகள் உடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

இந்த மையத்தில் அளிக்கப்படும், Transcranial Magnetic Stimulation (TMS) சிகிச்சையானது நரம்பியல் மற்றும் மனநல கோளாறுகளில் இருந்து நோயாளிகளை விடுவித்து, அவர்களை நல்ல நிலையை அடையச் செய்யும். Transcranial Direct Current Stimulation (tDCS) சிகிச்சையானது, நோயாளிகளின் தலையில் தாழ்வழுத்த மின்னாற்றலைப் பாய்ச்சி மூளையை சரியான பாதையில் இயங்கச் செய்வதாகும். Transcutaneous auricular Vagus nerve Stimulation (taVNS) சிகிச்சையானது மனித நரம்பு மண்டலக் கிளைகளைச் சீரமைப்பதாகும்.

புத்தி கிளீனிக்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சைக்காக சென்னையைச் சேர்ந்த புத்தி கிளினிக் உடன் இணைந்து பணியாற்றத் தொடங்கி உள்ளது. புத்தி கிளினிக் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையானது,  சர்வதேச நரம்பியல் மனநல சிகிச்சை நிபுணர் டாக்டர் இ.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 360 டிகிரி முறையில் உடல், மனம் மற்றும் மூளையை மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழங்கால முறையில், நவீன மருத்துவத்தை உட்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.