முதல் பேசும் தமிழ் படம் "காளிதாஸ்" ரிலீசான தினம் இன்று அக்டோபர் 31

Must read

தமிழின் முதல் பேசும் படத்தின்பெயர் காளிதாஸ். தென்னிந்தியாவின் முதல் பேசும் சினிமாவும் அதுதான். இதே நாளில்தான் அது வெளியானது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சமஸ்கிருத மகாகவி காளிதாஸ்.அவர் சாகுந்தலம், மேகதூதம் எனும் அமர காவியங்களை இயற்றி உள்ளார்.அவரைப் பற்றிய சினிமாவாகும் இது.
தமிழ்ப் படம் என்றாலும் அதில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் பேசியுள்ளனர். இதில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர். இதில் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. “இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை” போன்ற தேசபக்திப்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி இருந்தார்.அவர்தான் முதல் சினிமா பாடலாசிரியர்.
1931_kalidas_h_m_reddy
இதன் முதல் காட்சி சென்னையில் இருந்த ‘சினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் 1931, அக்டோபர் 31 இல் திரையிடப்பட்டது.
கான் பகதூர் அர்தேசிர் இரானி எனும் புகழ்பெற்ற இயக்குநரின் இம்பீரியல் மூவிடோன் கம்பெனியின் மூலம் இந்த படம் தயாரிக்கப்பட்டது. அவரின் உதவியாளரான எச். எம். ரெட்டி படத்தை இயக்கினார். எட்டாயிரம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் 75 ஆயிரம் வரை வசூல் செய்தது.
1931 முதல் 40 வரை எடுத்த படங்களில் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. அவற்றில் காளிதாஸ் படமும் ஒன்று என்பது சோகச் சேதிதான்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article