நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஜூலை 6ம் தேதி வெளியாக உள்ளது.
அனிருத் -நெல்சன் கூட்டணி படங்கள் என்றாலே ப்ரோமோ-வுக்கே ப்ரோமோ போட்டு அசத்துவார்கள்.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.