2020 ஆம் ஆண்டு முதல் வாரமான வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தமிழ் சினிமாவில் மொத்தம் 7 படங்கள் வெளியாக உள்ளது.

மைம் கோபி, சார்லி, சிறுவர்கள் ‘காக்கா முட்டை’ ரமேஷ், ‘அப்பா’ நசாத் ஆகியோர் நடித்திருக்கும் ‘பிழை’ படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்வேல் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தாமோதரன் தயாரித்திருக்கிறார்.

உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரித்திருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படத்தை வி.பி.நாகேஸ்வரன் எழுதி இயக்கியிருக்கிறார். நோவா இசையமைத்திருக்கிறார்.

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’. என்.கே.பிரகாஷ், புஷ்கர் மல்லிகர்ஜுனா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சச்சின் ரவி இயக்கியிருக்கிறார். பி.அஜனீஸ் லோக்நாத், சரண் ராஜ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

கிஷோர் சினி ஆர்ட்ஸ் சார்பில் சிவகாசி முருகேசன் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் ‘தேடு’ சுசி.ஈஸ்வர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.ஜே.கோபிநாத் இசையமைத்திருக்கிறார்.

நிலா மூவி மேக்கர்ஸ் சார்பில் ராஜாதிராஜன் தயாரித்திருக்கும் ‘ஆனந்த வீடு’ படத்தை ஜி.சுகுமாரன் இயக்கியிருக்கிறார். கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ’யமதொங்கா’ படத்தின் தமிழ் டப்பிங் ‘விஜயன்’.எம்.ஜெயகீர்த்தி, ரேவதி மேகவண்ணன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மரகதமணி இசையமைத்திருக்கிறார்.

எஸ்.எச்.மீடியா ட்ரீம் நிறுவனம் சார்பில் சாகுல் ஹமீது தயாரித்திருக்கும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ படத்தை நவீன் மணிகண்டன் இயக்கியிருக்கிறார். லோகேஷ் இசையமைத்திருக்கிறார்.