2020ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

Must read

சென்னை:

மிழக சட்டமன்றத்தின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி கூடுவதாக சட்டமன்ற செயலாளர் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் புத்தாண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

இதுகுறித்து  தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்குகிறது.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார்.

கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் மட்டுமே நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அப்போது பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும், மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும்  எதிர்பார்க்கப் படுகிறது.

More articles

Latest article